சின்னப்பிள்ளத்தனமாவுல்ல இருக்கு!! நடிகர் வடிவேலுக்கு போலி டாக்டர் பட்டம்!!

 
வடிவேலு

சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் சார்பில் வடிவேலுவுக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டம் போலியானது என்கிற பகீர் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் வைகை புயலாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்  நடிகர் வடிவேலு.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இவருடைய காமெடி சீன், பாடி லாங்குவேஜுக்கு  ரசிகர்கள் அதிகம். கடந்த சில வருடங்களாக இனி திரைத்துறையில் இருந்து ஒதுங்கி இருந்தார். வடிவேலு நடிக்க ரெட் கார்டு போட்டாலும், அவரது காமெடி காட்சிகள் மீம்ஸ் மூலம் தினம் தினம் மக்கள் அவரை ரசித்து வந்தனர்.

“நாய் சேகர் ரிட்டன்ஸ்” அலப்பறையாக வடிவேலு ரீஎன்ட்ரி!.

 2021ல்  வடிவேலு படங்களில் நடிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு அவர் மீண்டும் சினிமாவில் ரீ-எண்ட்ரி ஆனார். இதன் பிறகு அவருக்கு மீண்டும் படவாய்ப்புக்கள் வரத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் கடந்த ஆண்டு  நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வெளியானது. தற்போது பி.வாசு இயக்கும் சந்திரமுகி 2, மாரி செல்வராஜ் இயக்கத்தில் மற்றொரு படம் தயாராகி வருகின்றன.  இதுதவிர வேறு சில படங்களில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வடிவேலு  ரீ-எண்ட்ரியில் படு ஜோராக கலக்கிக் கொண்டிருக்கிறார் .

இந்நிலையில்,  கடந்த சில தினங்களுக்கு முன்னர் சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் சார்பில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இது குறித்த புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகின.  இந்நிலையில், வடிவேலுவுக்கு வழங்கப்பட்ட அந்த டாக்டர் பட்டம் போலியானது என்கிற பகீர் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த  விழா  அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில்  நடிகர் வடிவேலு மட்டுமின்றி தேவா, யூடியூப் பிரபலங்கள் கோபி, சுதாகர், நடன இயக்குனர் சாண்டி உட்பட ஏராளமான பிரபலங்களுக்கு அந்த போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

எனக்கு எண்ட் கார்டே கிடையாது! நடிகர் வடிவேலு அலப்பறை!
தற்போது சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்கிற அமைப்பே கிடையாது என அதிர்ச்சிகரமான தகவல்  வெளியாகி உள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் விடுத்த செய்திக்குறிப்பில் வடிவேலுவுக்கு கெளரவ டாக்டர் பட்டத்தை நாங்கள் வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.மேலும் அந்த ஏமாற்று கும்பல்  ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகத்தையும், அண்ணா பல்கலைக்கழகத்தையும் ஏமாற்றியுள்ளது. உடனடியாக அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.  இச்சம்பவம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web