எல்லா மாநாட்டிலும் ஒரே மாதிரியான பேச்சு... விஜய் அரசியல் குறித்து கலாய்த்த கஸ்தூரி!
கோவை விமான நிலையத்தில் பாஜக பிரமுகரும் நடிகையுமான கஸ்தூரி நிருபர்களிடம் பல அரசியல் கருத்துகளை தெரிவித்தார். ரசிகர்கள் திரள்வதை வைத்து புதிய கட்சிக்கு ஆதரவு இருக்கிறது என்று கூற முடியாது என்றார். தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை என்ன முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியல் குறித்து பேசிய அவர், தேர்தலில் திமுக மற்றும் தவெகவுக்கு தான் போட்டி என விஜய் தொடர்ந்து கூறுவது குறிப்பிடத்தக்கது என்றார். மேலும் மாநாடு தோறும் ஒரே மாதிரியான பேச்சை விஜய் பேசுகிறார் எனவும் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நடக்கும் பல பிரச்சினைகளில் விஜய் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் கஸ்தூரி கூறினார். சைலன்ட்டாக அரசியலில் வெற்றி பெறும் காலம் எம்ஜிஆர் காலத்துடன் முடிந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்தார். இறுதியாக ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்பே முக்கியம் என்றும், தேர்தல் முடிவுகள் தான் யாருக்கு ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்கும் என்றும் கூறினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
