“என் உசுருல பாதியான உன்னைக் கொன்று விட்டேனே...” மனைவியைக் கொன்று 'ஸ்டேட்டஸ்' வைத்த கணவன்!

 
மனைவி கொலை தம்பதி

திருந்திவிட்டதாகக் கூறித் தாய் வீட்டிலிருந்த மனைவியை அழைத்து வந்து, நள்ளிரவில் அவர் தூங்கிக் கொண்டிருந்தபோதே கல்லால் அடித்துக் கொலை செய்துள்ளான் கொடூரக் கணவன்.

வனபர்த்தி மாவட்டம் சித்த குண்டாவைச் சேர்ந்த ஆஞ்சநேயுலு, கார் டிரைவராக இருந்து வந்துள்ளார். இவரது மனைவி சரஸ்வதி (34). இவர்களுக்கு 12 வயதில் மகனும், 9 வயதில் மகளும் உள்ளனர். ஆஞ்சநேயுலு வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றியதால் குடும்பத்தில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளின் படிப்பும் பாதிக்கப்பட்டது. மேலும், மனைவியின் நடத்தையில் ஆஞ்சநேயுலு சந்தேகப்பட்டதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

பள்ளி மானவி தற்கொலை

இதனால் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்குச் சென்ற சரஸ்வதியை, "நான் திருந்தி விட்டேன்" என ஆஞ்சநேயுலு ஆசை வார்த்தை கூறி கடந்த 17ம் தேதி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, சரஸ்வதி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது அவரது தலையில் பெரிய கல்லால் ஆஞ்சநேயுலு பலமுறை தாக்கியுள்ளார். இதில் சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நரபலி க்ரைம் கொலை

தாயின் ரத்தம் பட்டு குழந்தைகள் கண்விழித்த போது, "அம்மா தூங்குகிறார், நீங்களும் தூங்குங்கள்" என்று கூறிவிட்டு ஆஞ்சநேயுலு தப்பியோடியுள்ளார். பின்னர் குழந்தைகள் விளக்கைப் போட்டுப் பார்த்த போது தாய் இறந்து கிடப்பதைக் கண்டு கதறித் துடித்தனர். கொலையைச் செய்து விட்டுத் தலைமறைவான ஆஞ்சநேயுலு, தனது வாட்ஸ்அப்பில் "என் உயிரில் பாதியாக இருந்த உன்னை நான் என் கைகளால் கொன்று விட்டேனே" என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!