அமீர் வங்கி கணக்கில் ஜாபர் சாதிக் பணம் ... உறுதி செய்த அமலாக்கத்துறை..!

 
அமீர் ஜாபர் சாதிக்

  
திமுகவில் முன்னாள் நிர்வாகியும் பிரபல தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்  போதைப் பொருட்களை கடத்தியதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறையால்  கைது செய்யப்பட்டார். அதேபோல் போதைப் பொருள் விற்பனை செய்த பணத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்தது. ஜாபர் சாதிக் மீதான அமலாக்கத்துறை வழக்கில் இயக்குநர் அமீர் உட்பட 12 பேர் மீது 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் ஜாபர் சாதிக்கின் படத் தயாரிப்பு நிறுவனம் உட்பட  8 நிறுவனங்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.

அமீர்


இந்நிலையில் ஜாபர் சாதிக் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.  அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக ஜாபர் சாதிக் செயல்பட்டு வந்துள்ளார். போதைப் பொருள் விற்பனை செய்து அதன் மூலம் ஈட்டிய பணத்தை இயக்குநர் அமீர் உள்ளிட்டோரின் வங்கி கணக்குகளில் ஜாபர் சாதிக் வைத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் அமீர்

அதுமட்டுமல்லாமல் ஜாபர் சாதிக் பல்வேறு போலி நிறுவனங்கள் நடத்தி அந்த நிறுவனங்களுக்காக தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளிலும் பணம் செலுத்தி வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளதால், அவருக்கு ஜாமீன் கொடுக்க கூடாது என  எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை மார்ச் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.  
இயக்குநர் அமீர் இயக்கிய இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தை ஜாபர் சாதிக் தயாரிப்பில் உருவானது.  ஏற்கனவே இது குறித்த விசாரணைக்கு இயக்குநர் அமீர்  ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web