‘ஜாக்டோ - ஜியோ’, மகளிர் உரிமைத்தொகை... இன்று காலை தேர்தலுக்கு முன்பான திமுக அரசின் கடைசி பட்ஜெட்... எகிறும் எதிர்பார்ப்பு?!

2026ல் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நாட்கள் நெருங்க நெருங்க இப்போதே தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாளை, வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பான 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பான பட்ஜெட் தாக்கல் என்பதால் அறிவிப்புகள் பலமாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. வாக்குகளை மனதில் வைத்து இந்த பட்ஜெட்டில் பொதுமக்களுக்கான பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபையில் 2025-2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். 2026-ம் ஆண்டில் சட்டசபை தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட்டைதான் இந்த அரசு தாக்கல் செய்ய முடியும். எனவே தற்போது தமிழக அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட் தான் கடைசி முழு பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே உள்ள திட்டங்களில் அளிக்கப்படும் மகளிர் உதவித் தொகை இந்த பட்ஜெட் மூலம் அதிகரிக்கப்படுமா? உரிமைத் தொகை பெறுவோரின் எண்ணிக்கை உயர்த்தப்படுமா? பெண்களின் இலவச பேருந்து திட்டம் போன்றவைகளில் மேலும் மாற்றங்கள் வருமா போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளது.
மிக முக்கியமாக இந்த பட்ஜெட்டை அரசு ஊழியர்கள் அதிகளவில் எதிர்பார்த்துள்ளனர். அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக இன்றைய பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்சிக்கு வந்து 4 வருடங்களாகியும், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லையெனில் அது வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் இந்த பட்ஜெட்டில் இது பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!