பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஜாக்பாட்... ரயில் டிக்கெட்டில் 75% வரை தள்ளுபடி!
இந்திய ரயில்வே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ரயில் டிக்கெட்டுகளில் 50% முதல் 75% வரை பெரும் தள்ளுபடியை வழங்கி வருகிறது. மாணவர்கள் தங்கள் கல்வி மற்றும் பயணச் செலவைக் குறைத்துக் கொள்ள உதவும் வகையில் இந்தச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாணவர்களுக்கு இந்தச் சலுகை குறித்த விவரங்கள் முழுமையாகத் தெரியாமல் உள்ளது.
இந்திய ரயில்வே விதிப்படி, பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இந்தச் சலுகையைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். 12 வயது முதல் 25 வயது வரை உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்தச் சலுகையைப் பெறலாம். பொதுப் பிரிவு மாணவர்கள் அதிகபட்சமாக 50% வரை தள்ளுபடி பெற முடியும். எஸ்.சி. / எஸ்.டி. பிரிவு மாணவர்கள் அதிகபட்சமாக 75% வரை தள்ளுபடி பெற முடியும்.

இந்தத் தள்ளுபடி எல்லா வகையான டிக்கெட்டுகளுக்கும் பொருந்தாது. இதனைப் பெற மாணவர்கள் கட்டாயம் சில நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும்: இந்தத் தள்ளுபடி இரண்டாம் வகுப்பு (Second Class) மற்றும் ஸ்லீப்பர் கிளாஸ் (Sleeper Class) டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். ஏ.சி. அல்லது பிற உயர் வகுப்பு டிக்கெட்டுகளுக்கு இந்தச் சலுகை கிடையாது.

இந்தச் சலுகை ஐஆர்சிடிசி செயலி (App) அல்லது இணையதளம் மூலம் டிக்கெட் பதிவு செய்யும்போது கிடைக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்தச் சலுகையைப் பெற, மாணவர்கள் தங்கள் மாணவர் அடையாள அட்டையுடன் (Student Identity Card) நேரடியாக ரயில் டிக்கெட் கவுண்டருக்குச் சென்று டிக்கெட் பதிவு செய்ய வேண்டும்.ரயிலில் அடிக்கடி பயணம் செய்யும் மாணவர்கள், தங்களது பயணச் செலவைக் கணிசமாகக் குறைத்துக்கொள்ள இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
