மாணவர்களுக்கு ஜாக்பாட்... மத்திய அரசின் மெகா அறிவிப்பு... தனியார் கல்வி நிறுவனத்தில் படிக்க ஸ்காலர்ஷிப் ₹2 லட்சம் உதவி!

 
தேர்வு முடிவுகள் மாணவிகள் ரிசல்ட் சிபிஎஸ்இ ஸ்கூல் படிப்பு

இந்தியாவின் மிகப் பெரிய கல்வி நிறுவனங்களில் படிக்கும் கனவு காணும் பட்டியல் சமூகத்தைச் (SC) சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய அரசு ஒரு பொற்கால வாய்ப்பை அறிவித்துள்ளது. "சிறந்த கல்வி உதவித்தொகை திட்டத்தின்" (Top Class Education Scheme) கீழ், தனியார் நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்குக் கல்வி கட்டணமாக ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை உதவித்தொகை வழங்குவதற்கான புதிய விதிமுறைகளைச் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மாணவர்களின் திறமைக்குத் தடையே இருக்கக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தில் பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

உதவித்தொகையின் பிரம்மாண்ட உயர்வு:

இந்த உதவித்தொகைத் திட்டமானது, இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT), இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (IIM), அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்கள் (AIIMS), தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் போன்ற நாட்டிலேயே மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.


புதிய உச்ச வரம்பு:

மாணவர்கள் தனியார் கல்வி நிறுவனங்களில் சேரும்போது, அவர்களது கல்விக் கட்டணம் மற்றும் திரும்பப் பெற முடியாத பிற கட்டணங்களை ஈடுகட்ட ஆண்டுக்கு ₹2,00,000 (இரண்டு லட்சம் ரூபாய்) வரை நேரடியாக மாணவர்களுக்கு வழங்கப்படும்.

விமானப் பயிற்சி:

தனியார் விமான ஓட்டுநர் பயிற்சி போன்ற சிறப்புப் படிப்புகளுக்கு, ஆண்டு உச்ச வரம்பு ₹3.72 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பணம் நேரடியாகப் பரிமாற்றம்:

வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, கல்விக் கட்டணத்தின் முழுத் தொகையும் நேரடிப் பணப் பரிமாற்றம் (DBT) மூலம் மாணவர்களுக்குக் கிடைக்கும்.

வாழிட மற்றும் இதர படி:

கல்விக் கட்டணத்துடன் சேர்த்து, மாணவர்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் கணிசமான நிதி உதவி வழங்கப்படுகிறது: முதலாம் ஆண்டு உதவி: வாடகை, புத்தகங்கள், உபகரணங்கள் மற்றும் மடிக்கணினி வாங்குதல் போன்ற செலவுகளுக்காக மாணவர்களுக்கு முதல் ஆண்டில் ₹86,000 வழங்கப்படும். தொடரும் ஆண்டு உதவி: படிப்பின் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு ₹41,000 உதவித் தொகையாக வழங்கப்படும்.

சிபிஎஸ்இ

அதிக இடங்கள் மற்றும் பெண்கள் ஒதுக்கீடு:

இந்தத் திட்டம் அதிக மாணவர்களைச் சென்றடைய, மொத்த இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

புதிய இடங்கள் ஒதுக்கீடு:

2024–25 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டில், கூடுதலாக 4,400 புதிய இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

வருமான உச்சவரம்பு:

இந்த உதவித்தொகையைப் பெற, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ₹8 லட்சம் வரை இருக்கலாம்.

பெண்களுக்கான முக்கியத்துவம்:

மொத்த இடங்களின் ஒதுக்கீட்டில் 30% இடங்கள் தகுதியுள்ள பட்டியல் சமூக மாணவிகளுக்குக் கட்டாயம் ஒதுக்கப்படுகிறது. போதுமான மாணவிகள் இல்லாத பட்சத்தில் மட்டுமே, அந்த இடங்களை மாணவர்களுக்கு வழங்கலாம்.

சமூகத்தில் மிகவும் பின் தங்கியிருக்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கும், அவர்களுக்குச் சம வாய்ப்புகளை வழங்குவதற்கும் இந்த விரிவான திட்டம் ஒரு மைல்கல்லாக அமைகிறது. ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரு மாணவர்கள் வரை மட்டுமே இந்த உதவித்தொகையைப் பெற முடியும் என்றும், வேறு எந்த மத்திய/மாநில அரசு உதவித்தொகையையும் இவர்கள் பெறக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!