மீண்டும் தோனியுடன் மோதல்? வைரலாகும் ஜடேஜா ரகசிய ட்வீட்!!

 
சென்னை சூப்பர் கிங்ஸ்

 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதனை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடு வருகின்றனர். இந்த முறை நிச்சயம் கப் நமக்கு தான் என அவர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில் சிஎஸ்கே அணிக்குள் திடீரென பூகம்பம் வீசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆல்ரவுண்டர் ஜடேஜா போட்ட ஒரு ட்விட் தான் காரணம் என பரபரப்பாக பேசப்படுகிறது.


ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில், கர்மா எப்போதும் திரும்பி உங்களை வந்து சந்திக்கும் விரைவாகவோ இல்லை.. தாமதமாகவோ கண்டிப்பாக நிச்சயம் உங்களை நோக்கி வரும், என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவுதான் இந்த விவாதத்துக்கு காரணமாகியுள்ளது.இதற்கு அவருடைய மனைவியும் பாஜக எம்எல்ஏவாகவும் உள்ளவர், உங்களுடைய பாதையில் நேராகச் செல்லுங்கள் என பதிலளித்திருக்கிறார். இந்த டிவிட்டை பார்த்த ரசிகர்கள் குழம்பிப் போய்விட்டனர். நேற்று ஆட்டத்தில் ஜடேஜா பந்துவீச்சில் 50 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அப்போது தோனி அவரை அழைத்து ஏதோ பேசியது போல் இருந்தது. 

இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ரசிகர்கள் தோனி ஜடேஜாவை திட்டியதாகவும் இதற்கு தான் ஜடேஜா இவ்வாறு ட்வீட் போட்டு இருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார் . மேலும் சிலர் சென்னை அணி ரசிகர்கள் சிலர் தோனி களத்திற்கு வருவதற்காக ஜடேஜா ஆட்டமிழக்க வேண்டும் என நினைப்பது ஜடேஜா மனதை பாதித்துள்ளதாகவும் அதற்காகத் தான் அவர் இப்படி போட்டு இருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார். 

சென்னை சூப்பர் கிங்ஸ்

எனினும் என்ன பிரச்சினை? ஜடேஜா ஏன் அவ்வாறு பதிவிட்டார்? யாரை குறிப்பிட்டு பதிவிட்டார்? என்பது குறித்து இதுவரை தெளிவாக இல்லை.  ஒருவேளை ஜடேஜா மனைவி அரசியலில் இருப்பதால் அவர்கள் இருவருக்கும் ஏதேனும் பிரச்சனையா என்பது போன்ற பல சந்தேகங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும் நிலையில் ஜடேஜா இப்படி ட்விட் போட்டு அணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

  

From around the web