ஆஸ்திரேலிய வீரர்களை அடுத்தடுத்து அடித்து நொறுக்கும் ஜடேஜா!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!

 
ஜடேஜா

இன்று பிப்ரவரி  9ம் தேதி வியாழக்கிழமை இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான  பார்டர் - கவாஸ்கர் டிராபி நாக்பூரில் தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  ஆஸ்திரேலியா தொடக்க வீரர்களை இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள்  வீழ்த்தியுள்ளனர். உணவு இடைவேளைக்கு பின் லபுஷேன் 49 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 37 ரன்களிலும், ரென்ஷா ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஜடேஜா ஓவரில் ஆட்டமிழந்தனர்.  

ஜடேஜா

ஜடேஜாவின் ஸ்பின்னை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலியா வீரர்கள்  திணறினர்.  ஆஸ்திரேலிய அணி பக்கம் திரும்பிய டெஸ்ட் போட்டியை, ஜடேஜா ஒட்டு மொத்தமாக இந்திய அணி பக்கம் திருப்பியுள்ளார். டி20 உலகக்கோப்பைத் தொடர் ஆரம்பிப்பதற்கு  முன்னதாகவே ஜடேஜா காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகினார். நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்த ஜடேஜா மனைவியின் அரசியலுக்கு உதவியாக தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். ரசிகர்கள் இந்திய அணி முக்கியம் என  ஜடேஜாவை விமர்சித்து வந்தனர்.

ஜடேஜா

அனைவருக்கும் பதிலடி கொடுக்கும் வகையில்  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜா நேரடியாக களமிறங்கியுள்ளார். ஜடேஜாவின் ஸ்பின் அஸ்வின் மற்றும் அக்சர் படேல் பற்றி அதிகம் பேசிய ஆஸ்திரேலியா வீரர்களும் மீடியாவும், ஜடேஜாவின் திறமை குறித்து தற்போது நினைவு கூர்ந்துள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு "தான் ஒருவன் இருக்கிறேன்.. ஒரு காலத்தில் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் இருந்தவன்" என ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web