சிறுவர்கள் படம் பார்த்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை.!!

 
சிறை

உலகின் மர்மதேசம் என்று வடகொரியாவை அழைப்பது உண்டு. ஏனெனில் அங்கு என்ன நடக்கிறது என்பது வெளிவுலகத்துக்கு தெரியாது. அந்நாட்டு அரசு வெளியிடும் தகவல்கள் மட்டுமே பரவுகிறது. மற்றப்படி தென்கொரியா, அமெரிக்கா உளவு தகவல்கள் கூறுவதாக அவ்வப்போது வடகொரியா தொடர்பாக பல்வேறு அதிரவைக்கும் தகவல்கள் வெளிவரும். 

வடகொரியாவில் அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மக்கள் ஆட்சியாக இல்லாமல் அவரின் குடும்ப ஆட்சியாகத்தான் நடைபெறுகிறது.  

வடகொரியா

வடகொரியா தனக்கு என்று தனி கொள்கையில் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக இதர நாட்டு கலாச்சாரங்கள் நாட்டிற்குள் வராமல் பார்த்துக்கொண்டு வருகின்றனர். அப்படி தற்போது ஹாலிவுட் படங்களைச் சிறுவர்கள் பார்க்கக்கூடாது என்று தடை விதித்துள்ளனர். மீறினால் சிறுவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும், படங்களைப் பார்க்கும் சிறுவர்களின் பெற்றோர்கள் 6 மாதம் தொழிலாளர் முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளனர். மேலும் குடியிருப்பு பகுதிகளில் பெற்றோர்களுக்குக் கூட்டங்கள் நடத்தப்பட்டு சிறுவர்களை கலாச்சார வழியில் வளர்ப்பதற்கு அறிவுறுத்தப்படுகிறது என்று சில செய்தி நிறுவனங்களால் கூறப்பட்டுள்ளது.

வடகொரியா

வடகொரியாவில், தென் கொரியாவின் படங்கள் மற்றும் நாடகங்களைப் பார்ப்பதற்கும், பாடல்களை கேட்பதற்கும் ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web