ஜல்லிக்கட்டு காளை திருட்டு... போலீசார் விசாரணை!
Apr 16, 2025, 19:05 IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஜல்லிக்கட்டுக் காளையைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த முடுக்கலான்குளம் கீழத் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் பொன்மாடசாமி (52). விவசாயியான இவர், கொப்பம்பட்டி-முடுக்கலான்குளம் சாலையில் உள்ள தனது தோட்டத்தில் ஆடு, பசுக்கள், ஜல்லிக்கட்டுக் காளை ஆகியவற்றை வளர்த்து வருகிறாராம்.
இவர் நேற்று முன்தினம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் திருவிழாவுக்குச் சென்றுவிட்டு வந்து பார்த்தபோது, ஜல்லிக்கட்டுக் காளையைக் காணவில்லையாம். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், கொப்பம்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து, மாட்டைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web