ஜல்லிக்கட்டு தேதிகள் அறிவிப்பு.. வேட்டிய மடிச்சி கட்டி களமிறங்கத் தயாராகும் மாடுபிடி வீரர்கள்... !

 
ஜல்லிக்கட்டு

தமிழர் பண்டிகையாம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் புத்தரிசி, புதுப்பானையுடன் பொங்கலுக்கு தயாராகி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தை 1ம் தேதி தமிழர் திருநாள் பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  
அதன்படி, தை 1ம் தேதி, ஜனவரி 15 ம் தேதி  அவனியாபுரத்திலும், தை 2ம் தேதி ஜனவரி 16 ம்தேதி  பாலமேட்டிலும் ,  ஜனவரி 17ம் தேதி தை 3ம் தேதி   அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  

ஜல்லிக்கட்டு


இந்நிலையில், 2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் 15ம் தேதி, பாலமேட்டில் 16ம் தேதியும் அலங்காநல்லூரில் 17ம் தேதி அன்று ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற இருப்பதாக மதுரை மாவட்ட ஆட்சியர்  அறிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு
 ஜல்லிக்கட்டு நடத்த  போட்டியில் சாதி பெயரை குறிப்பிடக் கூடாது என ஐகோர்ட் மதுரைக்கிளை பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  மதுரையை பொறுத்தவரை அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட இடங்களில் சாதி பெயரில் காளைகளை அவிழ்த்து விடுவதால் இந்த அதிரடி உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.  அதே நேரத்தில்   ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கும் முன், தீண்டாமை உறுதிமொழி ஏற்க வேண்டும். இது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கவும்   காளையின் உரிமையாளர் பெயரை குறிப்பிடவும் உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web