ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை!! அதிரடி தீர்ப்பு!!

 
ஜல்லிக்கட்டு

தமிழகத்தில்  உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக மதுரை சுற்றுவட்டார பகுதிகளில்  நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிகள் சரித்திர புகழ் பெற்றவை. இதுதவிர சில மாவட்டங்களில் கோவில் விழாக்களையொட்டியும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது. அதிமுக ஆட்சியில் ஜல்லிகட்டு நடத்த தடை விதிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவால் ஜல்லிக்கட்டுக்கு ஏற்பட்ட தடையை  கண்டித்து  மெரினாவில் போராட்டம் நடத்த தொடங்கினர்.  இதனையடுத்து அப்போதைய  தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்தது. இதன் காரணமாக தற்போது தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு மாடுகள்
இந்நிலையில் ஜல்லிகட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த மனுக்களை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு  நவம்பர் 23, 2022ல்  விசாரணை நடத்தியது.  அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட அரசியல் சாசன அமர்வு, மனுக்கள் மீதான தீர்ப்பை  டிசம்பர் 12, 2022க்கு ஒத்தி வைத்தது. இந்த மனுக்கள் மீதான வழக்கு நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக தீர்ப்பினை வாசித்த நீதிபதிகள், “தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை. ஜல்லிகட்டு போட்டிகள்  குறித்த தமிழக அரசு சமர்ப்பித்த  ஆவணங்கள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளன.

ஜல்லிக்கட்டு உயர்நீதிமன்றம்


ஜல்லிக்கட்டினை பண்பாட்டின் ஒரு பகுதியாக அறிவித்த பிறகு நீதிமன்றம் அதில் தலையிட முடியாது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என்பதை ஏற்றுக்கொள்கிறோம். நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பில் இருந்த குறைகளை தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தம் சரி செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தம் அடிப்படை உரிமைகளை மீறாமல் விதிகளுக்கு உட்பட்டே உருவாக்கப்பட்டுள்ளது. ஜல்லிகட்டை அனுமதிக்கும் தமிழ்நாட்டு அரசின் அவசர சட்டம் செல்லும். கலாச்சாரம் என்றாலும் துன்புறுத்தலை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள் உறுதியாக பின்பற்றப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜல்லிக்கட்டில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். போட்டிகளில் விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையில் தமிழ்நாட்டின் சட்டம் உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web