2026 ஜல்லிக்கட்டு தேதிகள் அறிவிப்பு!
2026 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக காளை உரிமையாளர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். பல மாதங்களாக காளைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. போட்டியை காண ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதிகளை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவித்துள்ளார். அதன்படி அவனியாபுரத்தில் ஜனவரி 15-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. பாலமேட்டில் ஜனவரி 16-ம் தேதி போட்டி நடக்க உள்ளது.

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17-ம் தேதி நடைபெறும். இந்த அறிவிப்பு காளை உரிமையாளர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் போட்டிகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
