மணப்பாறை ஜல்லிக்கட்டு… 625 காளைகள்... 21 பேர் படுகாயம்!
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காலை 9.20 மணிக்கு தொடங்கிய போட்டி மாலை 4.50 மணிக்கு நிறைவடைந்தது.

இந்த ஜல்லிக்கட்டில் மொத்தம் 625 காளைகள் களம் கண்டன. 256 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். காளைகளை வெற்றிகரமாக அடக்கிய வீரர்களுக்கும், வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க நாணயம், பீரோ, கட்டில், சைக்கிள், அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டியின் போது காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் என மொத்தம் 21 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 2 பேர் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டை ஏராளமானோர் கண்டு களித்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
