ஜல்லிக்கட்டு காளை முட்டி பிளஸ் 2 மாணவர் பலி!

 
காளை

 

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. காஜாமலை பகுதியில் உள்ள ஜமால் முகமது கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். ஆட்சியர் வே.சரவணன், காவல் ஆணையர் என்.காமினி, மேயர் மு.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 706 காளைகள், 306 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர்.

திருச்சி நவலூர் ஜல்லிக்கட்டு

அதிக காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கார், புல்லட், பைக், டிராக்டர் உள்ளிட்ட பரிசுகள் அறிவிக்கப்பட்டன. போட்டி உற்சாகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கண்டு ரசித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மஞ்சுவிரட்டு ஜல்லிக்கட்டு

இந்த நிலையில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் (16) என்ற பிளஸ் 2 மாணவர் நண்பர்களுடன் போட்டியை பார்க்க வந்திருந்தார். அப்போது திடீரென பாய்ந்த காளை முட்டியதில் பலத்த காயம் அடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் 15 வீரர்கள் உள்பட 59 பேர் காயமடைந்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!