அவதார் 3… திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!
2009-ம் ஆண்டு வெளியான அவதார் படம் உலகையே வியக்க வைத்தது. அதைத் தொடர்ந்து 2022-ல் வந்த அவதார்–2 ரூ.15 ஆயிரம் கோடி வசூலைக் குவித்து சாதனை படைத்தது. இந்த வரிசையில், ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான அவதார் – ஃபயர் அண்ட் ஆஷ் மூன்றாம் பாகம், வரும் டிசம்பர் 19-ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், திரையரங்க புரொஜெக்டர் ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இந்தப் படத்தை திரையிடும் போது ஒலியின் ‘ஃபேடர் லெவல்’ 7.0-ஆக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதற்கு குறைவாக வைத்தால் படத்தின் முழுமையான ஒலி அனுபவம் கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
தான் நேரடியாக மிக்ஸிங் பணியில் ஈடுபட்டுள்ளதால் இந்த அளவை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார். தமிழகத்தில் சிறிய தனித் திரையரங்குகளில் இது சாத்தியமாகும் என்றும், மல்டிபிளக்ஸுகளில் சப்தம் அதிகரித்தால் அருகிலுள்ள கடைகளுக்கு தொந்தரவு ஏற்படும் என்பதால் சிரமம் எனவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
