ஹாலிவுட்டில் அதிர்ச்சி… நடிகர் ஜேம்ஸ் ரன்சோன் தற்கொலை
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ரன்சோன் (46) தற்கொலை செய்து கொண்டது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அண்மைக்காலமாக தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் மனநலப் பிரச்னைகளால் அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு பெற்ற ‘IT: சாப்டர் 2’ திரைப்படத்தில் ஜேம்ஸ் ரன்சோன் நடித்திருந்தார். அந்த படத்தின் மூலம் அவர் சர்வதேச அளவில் கவனம் பெற்றார். அவரது நடிப்பு தனித்துவமானதாக பாராட்டப்பட்டது.

இதற்கு முன், பிரபலமான ‘The Wire’ வெப் சீரிஸில் ஜிக்கி சோபோட்கா கதாபாத்திரத்தில் நடித்து ஜேம்ஸ் பெரும் புகழ் பெற்றிருந்தார். திறமையான நடிகராக அறியப்பட்ட அவர் இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டது ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
