ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்பு படை, பயங்கராதிகளுக்கிடையே பயங்கர துப்பக்கிச்சூடு!

 
இரண்டு பயங்கரவாதிகளை சுற்றிவளைத்த பாதுகாப்பு படை: காஷ்மீரில் மீண்டும் பதற்றம்..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள சபர்வான் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இன்று அதிகாலை முதல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.


பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்ததால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. மோதல் நீடிப்பதால், விவரம் பின்னர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினம் பாரமுல்லா மாவட்டம் சோபூர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web