சுசீந்திரம் தேரோட்டம்.... ஜனவரி 2 உள்ளூர் விடுமுறை...
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் மார்கழித் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்க வசதியாக மாவட்ட ஆட்சியர் அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் படி, குமரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஜனவரி 2-ஆம் தேதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அவசர பணிகள் மேற்கொள்ளும் அலுவலகங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும். விடுமுறைக்கு மாற்றாக, ஜனவரி 10-ஆம் தேதி சனிக்கிழமை முழு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேரோட்டத்தை முன்னிட்டு சுசீந்திரம் பகுதியில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நெரிசலை தவிர்க்க காவல்துறை, போக்குவரத்துத் துறையினர் சிறப்பு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர். நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த இந்த விடுமுறை அறிவிப்பு, குமரி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
