ஜனநாயகன் இசை விழாவில் கட்டுப்பாடு… ரசிகர்களுக்கு எச்சரிக்கை!

 
ஜனநாயகன்
 

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்குக் கொண்டு செல்லக் கூடாத பொருள்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. மலேசியாவில் நாளை (டிச.27) நடைபெறும் இந்த விழாவில் அரசியல் பேச்சுகள், விமர்சனங்களுக்கு முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் கடைசிப் படம் என்பதால் விழாவுக்கு ரசிகர்கள் பெருமளவில் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்  ஜனநாயகன்

அரசியலை நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிக்கும் டி-ஷர்ட், விசிறி, தலைப்பாகை, பேட்ஜ், குடை, கொடி, போஸ்டர் உள்ளிட்ட அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறியீடுகள், சின்னங்கள், வாசகங்கள் என எந்த வடிவிலும் அரசியல் சாயல் இருந்தால் அனுமதி இல்லை. பாதுகாப்பு குழுவினர் கடும் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

விஜய் ஜனநாயகன்

இதுதவிர உணவுப் பொருட்கள், மது, கேமரா, ட்ரோன், ஹீலியம் பலூன், ஸ்கேட்போர்டு, ஸ்டிக்கர், இசைப்பான்கள், கண்ணாடிப் பொருட்கள், வளர்ப்புப் பிராணிகள், ஆயுதங்கள், வெடிபொருட்கள், பந்து உள்ளிட்ட பல பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கு, பாதுகாப்பே முக்கியம் என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!