ஜனவரி 4 முதல் ‘ஜனநாயகன்’ முன்பதிவு !

 
jana nayagan

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய எச்.வினோத், தற்போது விஜய்யை வைத்து ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கியுள்ளார். படத்தின் எடிட்டிங் பணிகள் முடிவடைந்து, பொங்கல் வெளியீடாக ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே நாயகியாகவும், மமிதா பைஜூ முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

தீவிர அரசியலில் களமிறங்கியுள்ள விஜய் நடிக்கும் கடைசி படம் இதுதான் என கூறப்படுகிறது. இதனால் படத்துக்கு சினிமாவை தாண்டி அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கமான விஜய் படங்களைவிட இதில் அரசியல் நெடி அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே மலேசியாவின் கோலாலம்பூரில் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. நாளை மாலை 6.45 மணிக்கு தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ‘ஜனநாயகன்’ படத்தின் முன்பதிவு வரும் 4-ம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாக, விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!