18 மாதங்கள் பாலியல் தொல்லை.... கருக்கலைப்பு... ஜனசேனா எம்.எல்.ஏ மீது பரபரப்பு குற்றச்சாட்டு… ஆந்திர அரசியலில் அதிர்வு!

 
எம் எல் ஏ
 

 

ஆந்திரப் பிரதேச அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு வெடித்துள்ளது. ஆளும் கூட்டணி அரசின் முக்கிய முகமாக பார்க்கப்படும் ஜனசேனா கட்சி எம்.எல்.ஏ மீது கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் அரசியல் மட்டுமல்ல, சமூக ரீதியாகவும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில்வே கோடூர் தொகுதி எம்.எல்.ஏவும், மாநில அரசு கொறடாவுமான அரவா ஸ்ரீதர் ராவ், ஃபேஸ்புக் மூலம் பழகிய பெண்ணுடன் நெருக்கம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து சுமார் 18 மாதங்கள் தவறான உறவு வைத்திருந்ததாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். அந்த உறவின் போது கர்ப்பம் ஏற்பட்ட நிலையில், அழுத்தம் காரணமாக கருக்கலைப்பு செய்ய நேர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் பெண்ணின் கணவருக்கு தெரியவந்த பிறகே வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் ஆந்திர கூட்டணி அரசு கடும் தர்மசங்கடத்தில் சிக்கியுள்ளது. எம்.எல்.ஏ மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. காவல்துறையும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. வரும் நாட்களில் இந்த விவகாரம் அரசியலில் மேலும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!