பிண்ணனி பாடகி ஜானகி மகன் முரளி கிருஷ்ணா காலமானார்!
இந்திய திரையுலகின் பழம்பெரும் பின்னணி பாடகியான ஜானகி, 17 மொழிகளில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர். ‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேள்’ என அழைக்கப்படும் அவர், 4 தேசிய விருதுகள் மற்றும் 33 மாநில விருதுகளை பெற்றுள்ளார். 2013-ம் ஆண்டு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டபோதும், அது தாமதமானது என கூறி அவர் மறுத்தது குறிப்பிடத்தக்கது.

2016-ம் ஆண்டு திரையுலகிலிருந்து ஓய்வு பெற்ற ஜானகி, ஹைதராபாத்தில் தனது மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அவரது மகன் முரளி கிருஷ்ணா இன்று (ஜனவரி 22) காலமானார். அவர் நடிகராக பணியாற்றியவர். அவரது மனைவி பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடன கலைஞராக உள்ளார்.

முரளி கிருஷ்ணாவின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இசை உலகிற்கு அளப்பரிய சேவை செய்த ஜானகியின் குடும்பத்தில் ஏற்பட்ட இந்த இழப்பு, ரசிகர்களின் மனதையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
