இன்று மாலை ‘ஜனநாயகன்’ பட அப்டேட் வெளியீடு!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ள இந்த படம், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. அனிருத் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் பலம்கிரக எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
Selamat datang 😁
— KVN Productions (@KvnProductions) November 21, 2025
Watch this space at 5:30 PM today ✌🏻#Thalapathy @actorvijay sir @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @Jagadishbliss @LohithNK01 @RamVJ2412 @TSeries #JanaNayagan#JanaNayaganPongal #JanaNayaganFromJan9 pic.twitter.com/j8SyLZY8xi
அரசியலில் களமிறங்கும் விஜய் நடிக்கும் கடைசி படம் என கருதப்படுவதால், ‘ஜனநாயகன்’க்கு முன்னே பெரும் கவனம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான முதல்பாடல் “தளபதி கச்சேரி” பாடல் ரசிகர்களிடையில் பரபரப்பை ஏற்படுத்தி, பாடல் வெளியாவதற்காகவே சுமார் ரூ.300 கோடிக்கும் மேலான வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தயாரிப்பு நிறுவனம் விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக புதிய அப்டேட் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. அந்த அப்டேட் இன்று மாலை 05.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் இதற்காக காத்துக் கொண்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
