விஜய் vs சிவகார்த்திகேயன்... பொங்கல் ரேஸில் முந்தப் போவது யார்?
தொழில்நுட்பம் வளராத காலத்தில் பொங்கல், தீபாவளி என்றாலே திரையரங்குகளில் திருவிழா கோலம்தான். எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல் என ஜாம்பவான்கள் மோதிய காலம் போய், இப்போது ஆண்டு முழுவதும் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் சுமார் 280 படங்கள் வெளியானாலும், அதில் வெறும் 30 படங்கள் மட்டுமே கல்லாவைக் கட்டின என்பது வருத்தமான உண்மை. இந்நிலையில், 2026-ன் முதல் பண்டிகையான பொங்கலுக்கு விஜய்யின் 'ஜனநாயகன்' மற்றும் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' என இரண்டு மெகா படங்கள் நேருக்கு நேர் மோதுகின்றன.

அரசியல் களத்தில் குதித்துள்ள நடிகர் விஜய்க்கு 'ஜனநாயகன்' தான் கடைசிப் படம் என்பதால், தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்களும் சினிமா ரசிகர்களும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்தப் படம் தெலுங்கில் ஹிட்டான 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் என்று ஒரு பேச்சு அடிபட்டாலும், விஜய்யின் ஸ்டைலில் இதில் பல 'ஸ்பெஷல்' மேஜிக் இருக்கும் எனத் தெரிகிறது. மறுபுறம் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'பராசக்தி' படமும் சளைத்தது அல்ல. இதில் சிவகார்த்திகேயனுடன் ஜெயம் ரவி, அதர்வா என நட்சத்திர பட்டாளமே களம் இறங்கியுள்ளது.

முக்கியமாக, 1965-ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்டு 'பராசக்தி' உருவாவதால், 'வின்டேஜ்' ரசிகர்களுக்கு இந்தப் படம் பெரிய விருந்தாக அமையும் எனக் கூறப்படுகிறது. இரண்டு படங்களுக்குமே பலத்த எதிர்பார்ப்பு இருந்தாலும், கடைசிப் படம் மற்றும் அரசியல் எண்ட்ரி போன்ற காரணங்களால் இளைய தளபதி விஜய்க்கே ரசிகர்கள் மத்தியில் அதிக வேகம் இருப்பது தெரிகிறது. இந்த பொங்கல் ரேஸில் யார் முந்தப் போகிறார்கள் என்பதைப் பார்க்க ஒட்டுமொத்த கோலிவுட்டும் ஆவலுடன் காத்திருக்கிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
