‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் தாமதம்… வெளியீட்டில் குழப்பம்!
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய எச்.வினோத், விஜயை வைத்து ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கியுள்ளார். பொங்கல் வெளியீடாக வரும் 9-ம் தேதி படம் திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூஜா ஹெக்டே நாயகியாகவும், மமிதா பைஜூ முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். இது விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறப்படுவதால் அரசியல் ரீதியாகவும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வழக்கமான விஜய் படங்களைவிட அரசியல் நெடி அதிகம் இருக்கும் படமாக ‘ஜனநாயகன்’ உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் சமீபத்தில் நடந்தது. டிரெய்லர் இன்று மாலை 6.45 மணிக்கு பல மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து கடந்த மாதம் தணிக்கைக்கு அனுப்பப்பட்ட நிலையில், இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. டிசம்பர் 19-ம் தேதி சில காட்சிகளை நீக்க தணிக்கைக்குழு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அவற்றை நீக்கி மறு தணிக்கைக்கு அனுப்பியுள்ள போதும் சான்றிதழ் தாமதமாகி வருகிறது. 9-ம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தணிக்கை தாமதம் படக்குழுவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
