ஜன நாயகன் டிரைலர்… யூடியூபில் அதிரடி சாதனை!
நடிகர் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வருகிறது. மலேசியாவில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்து தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து படத்தின் டிரைலர் பான் இந்திய மொழிகளில் வெளியானது.
வெளியான சில நேரங்களிலேயே தமிழ் டிரைலர் யூடியூபில் 3.7 கோடி பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. குறுகிய நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்பட டிரைலராக இது இடம்பிடித்துள்ளது. ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரைலரை கொண்டாடி வருகின்றனர்.
இதனுடன் ஹிந்தி டிரைலர் 1.1 கோடி பார்வைகளையும், தெலுங்கு டிரைலர் 74 லட்சம் பார்வைகளையும் கடந்துள்ளது. இன்னும் சில நாள்களில் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஜன நாயகன் படம் விஜய் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும் என கூறப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
