ஜனநாயகன் தடை… விஜய்க்கு ஆதரவு கரம் நீட்டிய காங்கிரஸ் !
தவெக தலைவர் விஜயின் இறுதித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க தாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஜனவரி 9-ந் தேதி வெளியாகவிருந்த படம் இதனால் ஒத்திவைக்கப்பட்டது. தீய நோக்கத்துடன் மத்திய அரசு தணிக்கை வாரியத்தை பயன்படுத்தி படத்தை தடுத்து நிறுத்தியதாக விமர்சனங்கள் வலுத்துள்ளன.
ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. இது தமிழ் திரையுலகத்தின் மீது நடத்தப்படுகிற தாக்குதல். நமது அரசியல் சார்பு,விருப்பு வெறுப்புகளைத் தாண்டி கருத்துச் சுதந்திரத்தின் மீது நம்பிக்கையுள்ள… pic.twitter.com/lbOlaFD47j
— Jothimani (@jothims) January 8, 2026
இந்த விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர். ‘ஜனநாயகன்’ படத்தை தடுப்பது தமிழக மக்களை அவமதிப்பதற்கு சமம் என காங்கிரஸ் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி கூறியுள்ளார். அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறைக்கு பிறகு தற்போது தணிக்கை வாரியமும் மத்திய அரசின் அரசியல் ஆயுதமாக மாறிவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், அரசியல் எதிரிகளுக்கு எதிராக தணிக்கை வாரியம் பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். கருத்துச் சுதந்திரத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் காங்கிரஸ் தரப்பில் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதற்கிடையே, புகார்கள் அடிப்படையில் படம் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டதாக தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
