நாளை காலை ‘ஜனநாயகன்’ சென்சார் வழக்கில் தீர்ப்பு ... ஆவலுடன் காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்!
நடிகர் விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு சென்சார் சான்று வழங்கக் கோரிய வழக்கில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்துள்ளன. இந்த வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. நீதிபதி பி.டி.ஆஷா இந்த தீர்ப்பை அறிவிக்கிறார்.

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம், அவர் அரசியலுக்கு நுழைந்த பிறகு வெளியாகும் கடைசி படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படத்தில் இடம்பெறும் அரசியல் வசனங்கள் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன. பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, டிக்கெட் முன்பதிவுகளும் வேகமாக நடைபெற்றன.

ஆனால் இதுவரை படத்திற்கு சென்சார் சான்று கிடைக்கவில்லை. இதனால் தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரொடக்சன்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களை செய்த பின்னரும், மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் உள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் சான்று வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தீர்ப்பு படத்தின் வெளியீட்டை தீர்மானிக்க உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
