ஜனநாயகன் பொங்கல் ரிலீஸ் கிடையாது... வழக்கின் விசாரணை 21ம் தேதிக்கு ஒத்தி வைப்பு... ரசிகர்கள் ஏமாற்றம்!

 
ஜனநாயகன்
 

 

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த தணிக்கை வாரிய முடிவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, தணிக்கை வாரிய தலைவர் அதிகார வரம்பை மீறியுள்ளதாக கூறி, படத்திற்கு உடனடியாக யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். புகார் பிற்போக்குத்தனமானது என்றும், இத்தகைய புகார்களை ஊக்குவிக்க முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி ஶ்ரீவஸ்தவதா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அவசரமாக மேல்முறையீடு செய்தது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தணிக்கை வாரியம் தரப்பில், பதில் மனு தாக்கல் செய்ய போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என்றும், வெளியீட்டு தேதியை முன்பே அறிவித்து நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியாது என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு அமர்வு தடை விதித்தது. தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை 21-ந் தேதிக்கு ஒத்திவைத்தது. இதனால் பொங்கல் பண்டிகைக்கு ஜனநாயகன் படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!