‘ஜனநாயகன்’ முடக்கம் ... மோடிக்கு எதிராக குரல் கொடுத்த ராகுல் காந்தி!
நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தாமதம் செய்வதை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். சான்றிதழ் வழங்காமல் படத்தை முடக்க முயற்சிப்பது தமிழ் கலாசாரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். இது தமிழக அரசியல் மற்றும் திரைத்துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனநாயகன் படத்தை ஒன்றிய அரசு முடக்க முயற்சிப்பது தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல். தமிழர்களின் குரலை உங்களால் ஒருபோதும் ஒடுக்க முடியாது மிஸ்டர் மோடி” என்று தெரிவித்துள்ளார். தணிக்கை வாரியத்தின் தாமதம் அரசியல் உள்நோக்கத்துடன் செய்யப்படுவதாக ஏற்கனவே எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு, அவரது இந்த கருத்து மேலும் வலு சேர்த்துள்ளது.
ஜனவரி 9-ம் தேதி வெளியாக இருந்த ‘ஜனநாயகன்’ படம் சான்றிதழ் தாமதம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி U/A சான்றிதழ் வழங்க உத்தரவிட்டாலும், தலைமை நீதிபதி அமர்வு இடைக்காலத் தடை விதித்தது. தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ராகுல் காந்தியின் இந்த கருத்து தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜனவரி 15-ம் தேதி நடைபெற உள்ள விசாரணையை ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
