‘ஜனநாயகன்’ படத்திற்கு தடை விலகுமா? செவ்வாய்க்கிழமை தீர்ப்பு!
‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கான தணிக்கைச் சான்று தொடர்பான வழக்கில் வரும் செவ்வாய்க்கிழமை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், ஜனவரி 27-ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரிக்கப்பட்டது.

படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக் கோரி கே.வி.என். புரொடக்ஷன் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மறுஆய்வு குழுவுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்திருந்தார். இதனை எதிர்த்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இதையடுத்து தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு வழக்கு மேல்முறையீட்டு அமர்வுக்கு மாற்றப்பட்டது.

விசாரணையின் போது, படத்தில் மதம் மற்றும் பாதுகாப்பு சின்னங்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக தணிக்கை வாரியம் வாதிட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் தரப்பில், ஆட்சேபனை கூறப்பட்ட 14 காட்சிகள் நீக்கப்பட்டதாகவும், யு/ஏ சான்றிதழ் வழங்க குழு பரிந்துரை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. ரூ.500 கோடி முதலீட்டுடன் படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு திரைப்படத் துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
