‘ஜன நாயகன்’ தாமதம்: தயாரிப்பாளருக்காக வருத்தம் தெரிவித்த விஜய்!
நடிகர் விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படம் கடந்த ஜனவரி 9-ம் தேதி வெளியாக வேண்டியது. ஆனால் இறுதிக்கட்ட தணிக்கைச் சான்றிதழ் பிரச்னையால் வழக்கு தொடரப்பட்டு படம் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் ஏற்பட்டது.

படத்திற்கு ரூ.500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. பிப்ரவரியிலும் படம் வெளியாகவில்லை என்றால் தேர்தல் காரணமாக மேலும் சில மாதங்கள் தள்ளிப்போகும் நிலை உள்ளது. இது தயாரிப்பாளருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்த விஜய், படம் திட்டமிட்டபடி வராது என எதிர்பார்த்ததாக கூறியுள்ளார். தனது அரசியல் வருகையே தாமதத்திற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளரை நினைத்து வருத்தமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
