‘ஜனநாயகன்’ படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய படக்குழு!
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தவெக தலைவர் Vijay நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் தற்போது வெளியீட்டு சிக்கலில் சிக்கியுள்ளது. தணிக்கை விவகாரம் காரணமாக படம் வெளியிடுவதில் தடைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வுக்காக படக்குழு மீண்டும் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறு ஆய்வு குழு அடுத்த வாரம் இந்த படத்தை பார்வையிட உள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு படத்தின் நிலை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தல் முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக KVN Productions தயாரிப்பு நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. ரசிகர்கள் மத்தியில் இந்த படம் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
