‘ஜனநாயகன்’ படத்துக்கு மீண்டும் சிக்கல்… மறு ஆய்வுக்கு அனுப்ப உத்தரவு!
‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு சான்று வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை நீதிமன்றம் விசாரித்தது. தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு பிறப்பித்த உத்தரவில், படத்தில் நாட்டின் மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் காட்சிகள் இருப்பதாக புகாரில் கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டது.
அந்நிய சக்திகள் மதப் பிரச்சினைகளை உருவாக்கும் வகையிலும், ராணுவம் தொடர்பான காட்சிகள் மற்றும் வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மிகவும் தீவிரமானது என்பதால், படம் திரையிட அனுமதிக்கும் முன் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில், ‘ஜனநாயகன்’ திரைப்படம் மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்தது. மேலும், சென்சார் போர்டுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்காதது தவறு என்றும், முன்கூட்டியே தெரிவிக்கப்பட்ட முடிவுக்கு எதிராக தயாரிப்பு நிறுவனம் உரிய கோரிக்கை வைக்காத நிலையில், அந்த முடிவை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
