ஜன.9 கடைசி தேதி... மத்திய அரசு வேலைவாய்ப்பு... ஐஓசியில் 394 காலி பணியிடங்கள்!
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL), நாடு முழுவதும் உள்ள தனது கிளைகளில் காலியாக உள்ள 394 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 'Non-Executive' பிரிவின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியுள்ள இந்தியக் குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசு வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு, குறிப்பாகப் பொறியியல் மற்றும் அறிவியல் பின்னணி கொண்ட இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.

பதவி மற்றும் கல்வித் தகுதி:
ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டெண்ட்-IV (Junior Engineering Assistant-IV) மற்றும் ஜூனியர் குவாலிட்டி கன்ட்ரோல் அனலிஸ்ட் (Junior Quality Control Analyst) ஆகிய பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 12-ஆம் வகுப்பு, டிப்ளமோ (Diploma) அல்லது பி.எஸ்சி (B.Sc) பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மாதம் 25,000 ரூபாய் முதல் 1,05,000 ரூபாய் வரை சிறப்பான சம்பளம் மற்றும் இதர சலுகைகள் மத்திய அரசு விதிகளின்படி வழங்கப்படும்.
வயது வரம்பு மற்றும் தளர்வு:
விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 26 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். இருப்பினும், அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்குப் பிரிவு வாரியாக 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வு முறை:
பொது மற்றும் ஓபிசி பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக 300 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் ஏதுமில்லை. தகுதியான நபர்கள் கணினி வழித் தேர்வு (Computer Based Test) மற்றும் திறன்/உடல் தகுதித் தேர்வு (Skill/Proficiency/Physical Test) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முக்கியத் தேதிகள்:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://iocl.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி டிசம்பர் 20, 2025 ஆகும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் கடைசித் தேதி ஜனவரி 9, 2026 என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் காலதாமதமின்றி விண்ணப்பித்துத் தங்களது அரசுப் பணி கனவை நனவாக்கிக் கொள்ளலாம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
