வைரல் வீடியோ... ஜனநாயகன் விஜய்யின் கடைசி படமா?... மமிதா பைஜு பளிச் பதில்!

 
ஜனநாயகன்


தமிழ் திரையுலகின் முண்ணனி நடிகர் இளையதளபதி விஜய் தற்போது நடித்து வரும் படம் ஜனநாயகன். இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில்  ‘ஜன நாயகன்’ திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும் தனது கடைசி படம் என விஜய் முன்னதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், தளபதி விஜய்யின் கடைசி படம் குறித்த பேசிய மலையாள நடிகை மமிதா பைஜு  வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அயர்லாந்தில் நடந்த கேரள கார்னிவலில்  மமிதா பைஜு கலந்து கொண்டார்.  தளபதி விஜய்யுடன் ‘ஜன நாயகன்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்  “ஒரு நாள், நாங்கள் ஒன்றாக படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தபோது, ​​’ஜன நாயகன்’ தான் அவருடைய கடைசி படமா என்று நான் அவரிடம் கேட்டேன். திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பது குறித்து, தேர்தல் முடிவுகளை பொறுத்து முடிவு செய்வேன் என விஜய் சார் வெளிப்படையாகச் சொன்னார்” எனக் கூறியுள்ளார்.  

விஜய் ஜனநாயகன்
 விஜய் உட்பட ‘ஜன நாயகன்’ படக்குழுவினர் அனைவரும் படப்பிடிப்பின் இறுதி நாட்களில் எப்படி உணர்ச்சிவசப்பட்டார்கள் என்பதையும் கூறினார்.”படப்பிடிப்பின் கடைசி நாட்களில், நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். நான் மட்டுமல்ல, படப்பிடிப்பில் இருந்த மற்ற அனைவரும் உணர்ச்சி வசப்பட்டோம். விஜய்யும் உணர்ச்சிவசப்பட்டு, புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்க முடியவில்லை” என பேசினார்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது