புத்தகத்தில் சிவப்பு ஷீட் ... ஜப்பான் மாணவர்கள் புத்திசாலிதனத்தின் ரகசியம்!

 
ஜப்பான்
 

ஜப்பானில் மாணவர்கள் ரயிலில் அல்லது வகுப்பறைகளில் படிக்கும்போது, புத்தகத்தின் மேல் சிவப்பு நிற பிளாஸ்டிக் ஷீட்டை வைத்திருப்பதை காணலாம். பலர் இதை சாதாரண புக்மார்க் என்று நினைத்தாலும், இதற்குப் பின்னால் ஒரு பயனுள்ள படிப்பு முறை உள்ளது. மாணவர்கள் தங்களது படிப்பை சுயமாகச் சரிபார்க்க இந்த முறையைப் பயன்படுத்துகின்றனர்.

ஜப்பானிய பாடப்புத்தகங்களில் முக்கியமான விடைகள் பெரும்பாலும் சிவப்பு நிற மையில் அச்சிடப்பட்டிருக்கும். படிக்கும் போது சிவப்பு ஷீட்டை புத்தகத்தின் மேல் வைத்தால், சிவப்பு மையில் உள்ள விடைகள் மறைந்து விடும். இதனால் மாணவர்கள் விடைகளைப் பார்க்காமல் கேள்விகளுக்கு பதில் சொல்ல முயற்சி செய்ய முடிகிறது.

எந்த எலக்ட்ரானிக் சாதனமும் இல்லாமல், குறைந்த செலவில் நினைவாற்றல் மற்றும் கவனத்தை அதிகரிக்க இந்த முறை உதவுகிறது. சுயமாகக் கற்றுக்கொள்ளவும், தேர்வுகளுக்கு எளிதாகத் தயாராகவும் இந்த எளிய நடைமுறை ஜப்பானிய மாணவர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!