ஏற்றுமதிக்கு தடை... சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்த ஜப்பான் பிரதமர் !

 
ஜப்பான்
 

ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி பதவியேற்றார். அவரது பதவியேற்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரிவித்து, டோக்கியோவுக்கு நேரில் சென்று சந்தித்தார். சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து செயல்படுவோம் என இரு தலைவர்களும் கூட்டறிக்கை வெளியிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, ஜப்பானுக்கு எதிராக சீனா நடவடிக்கை எடுத்தால் போர் நடவடிக்கைக்கு தயார் என சனே தகைச்சி கடும் எச்சரிக்கை விடுத்தார். இந்த கருத்து சீனாவை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது. இதனால் சீனா – ஜப்பான் இடையேயான அரசியல் மற்றும் வர்த்தக உறவு கசக்கத் தொடங்கியது.

அதன் தொடர்ச்சியாக, சீனாவில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பல முக்கிய ராணுவ தொழில்நுட்ப பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அணுசக்தி உபகரணங்கள், மின்னணு சாதனங்கள், கணினிகள், விமான தொழில்நுட்ப பொருட்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த முடிவு இருநாட்டு உறவில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!