வரலாறு காணாத உச்சம்... கிலோ ரூ.10000 தொட்ட மல்லிகை விலை!
கடும் பனிப்பொழிவு மற்றும் பூக்களின் வரத்து குறைவு காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மல்லிகைப்பூ விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மார்கழி மாதம் என்பதால் பூமாலை அணிவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும், பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதும் தேவையை பலமடங்கு உயர்த்தியுள்ளது. இதனால் மலர் சந்தைகளில் மல்லிகைப்பூக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நிலக்கோட்டை மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சங்கரன்கோவிலில் ரூ.9 ஆயிரம், ஆண்டிப்பட்டியில் ரூ.8 ஆயிரம் என விலை பறக்கிறது. மதுரை மாட்டுத்தாவணியில் சில தினங்களுக்கு முன்பு ரூ.500-க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ, தற்போது ரூ.6 ஆயிரமாக உயர்ந்துள்ளது. போதிய பூக்கள் கிடைக்காததால் வெளிநாட்டு ஆர்டர்களை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் உள்ளிட்ட பல பூ மார்க்கெட்டுகளிலும் வரத்து குறைந்ததால் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ரூ.3 ஆயிரமாக இருந்த மல்லிகை, இன்று ரூ.7 ஆயிரத்துக்கும் மேல் விற்பனையாகியுள்ளது. செவ்வந்தி, சம்பங்கி, பிச்சிப்பூ, ரோஜா உள்ளிட்ட பூக்களின் விலையும் உயர்ந்துள்ள நிலையில், பொங்கல் நாள்களில் விலை மேலும் ஏறுமோ என்ற அச்சத்தில் இல்லத்தரசிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
