மல்லிகைப்பூ விலை ரூ2000ஆக அதிகரிப்பு!
Dec 30, 2025, 11:00 IST
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள பூ மார்க்கெட்டில் புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்கள், கோவில் வழிபாடுகள் காரணமாக பூக்களுக்கு தேவையும் அதிகரித்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ மல்லிகை ரூ.2,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. முல்லைப் பூ ரூ.850க்கும், கனகாம்பரம் ரூ.1,000க்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் பூ வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அதேபோல், பிச்சிப்பூ ரூ.130க்கும், அரளி ரூ.300க்கும் விற்பனையாகிறது. புத்தாண்டு நெருங்குவதால் வரும் நாட்களில் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
