வொர்த் இல்ல... தாயின் பெயரை இனிஷியலாக்கி கொண்ட ஜேசன் சஞ்சய்?!
நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய். இவர் தற்போது இயக்குநராக தனது பயணத்தை தொடங்கியுள்ளார். அவர் இயக்கி வரும் புதிய திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில் தனது அடுத்த படத்திற்கான பணிகளையும் அவர் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
#SAC about #JasonSanjay
— Movie Tamil (@_MovieTamil) February 25, 2025
- I asked him what are you going to do Next.
- I thought he become a hero, but he wants to become a director like me.
- I'am not going to do my first film with appa, I'am going to do my first film with #vijaysethupathi.https://t.co/gHGnDN3XoB
பொதுவாக தமிழ் திரையுலகில் பலர் தங்கள் தந்தையின் பெயரை ஆரம்ப எழுத்தாக பயன்படுத்துவது வழக்கம். ஆனால் ஜேசன் சஞ்சய் தனது பெயரின் இறுதியில் வேறொரு எழுத்தை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. புதிய படத்தின் தலைப்பு அட்டையிலும் அதிகாரப்பூர்வ கையெழுத்துகளிலும் அவர் “Jason Sanjay S” என்ற முறையை பயன்படுத்தியுள்ளார். இதில் உள்ள ‘S’ எழுத்து அவரது தாய் சங்கீதாவின் பெயரை குறிக்கலாம் என சமூக வலைதளங்களில் வைரலாக்கி பேசப்படுகிறது.
இதற்கிடையில் சமூக வலைதளங்களிலும் இந்த விஷயம் குறித்து பல்வேறு கருத்துகள் பரவி வருகின்றன. சமீபத்தில் ஜேசன் சஞ்சய் தனது சமூக வலைதளத்தில் தந்தையை பின்தொடர்வதை நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகின. மேலும் ஒரு நிகழ்ச்சியில் விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து பங்கேற்றதும் விவாதமாகியது. இந்த சூழலில் ஜேசன் சஞ்சய் எடுத்துள்ள இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
