ஓபிஎஸ் ரகசியம் என சொல்லி தொண்டர்களை ஏமாற்றும் வேலையை தான் 4 ஆண்டுகளாக செய்கிறார்... ஜெயக்குமார் கடும் தாக்கு!

தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றினால் தான் கல்விக்கான நிதி விடுவிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தமிழ்நாட்டில் என்றைக்கும் இருமொழிக் கொள்கைதான். தமிழ்நாட்டின் உரிமையை என்றும் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம். இந்தி திணிப்பை அதிமுக ஒருபோது ஏற்றுக்கொள்ளாது. திமுகவின் பாஜக எதிர்ப்பு ‘அடிப்பதுபோல அடிக்கிறேன், அழுவதுபோல அழு’ என இருக்கிறது. ஓபிஎஸ் ஒரு கொசு. கொசு பிரச்சனையைவிட நாட்டில் பேச வேண்டிய பிரச்சனைகள் பல உள்ளன. ரகசியம், ரகசியம் என தொண்டர்களை ஓ.பன்னீர்செல்வம் ஏமாற்றி வருகிறார். அது தொண்டர்களிடம் எடுபடாது.
ரகசியம் தெரிந்தால் அதை சொல்லுங்கள். ரகசியம் என சொல்லி தொண்டர்களை ஏமாற்றும் வேலை தான் 4 ஆண்டுக்கும் மேலாக ஓபிஎஸ் மற்றும் அவர் வகையறாக்களும் செய்வதாகவும் , அது நிச்சயம் தொண்டர்கள் மத்தியில் எடுபடாது. நீட் ரகசியம் என்றால் உதயநிதி. திமுகவோடு தொடர்பு இருக்கிறது என்ற நோய் தொற்று கொண்டது. அதனால் தான் எனக்கு அந்த ரகசியம் தெரியும் என தெரிவித்துள்ளார்”
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!