திமுகவுக்கு தோல்வி பயம்... ஜெயக்குமார் சாட்டையடி!

 
ஜெயக்குமார்

மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5,000 வழங்கியுள்ளதாக ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து அரசியல் தரப்பில் விமர்சனங்கள் தொடர்கின்றன.இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெயக்குமார் வரும் தேர்தலில் திமுக தோல்வியடையும் என்ற நிலைமையே நிலவுவதாக கூறினார். அரசு கஜானாவை காலி செய்துவிட்டு செல்லும் நோக்கில், தேர்தலை மனதில் வைத்து ரூ.5,000 வழங்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.  

மகளிர் உரிமைத் தொகை

2021 தேர்தலில் குடும்ப அட்டைகளின் அடிப்படையில் அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 வழங்குவோம் என திமுக வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு குறிப்பிட்ட பெண்களுக்கு மட்டுமே தொகை வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காத அரசு, தேர்தல் நெருங்கும் நிலையில் தற்போது வழங்குவதாகவும் விமர்சித்தார்.மக்களிடம் வரிகள் மற்றும் கட்டண உயர்வுகள் மூலம் பெரும் தொகை வசூலித்துவிட்டு, பெண்களுக்கு குறைந்த தொகை வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். போதைப்பொருள் பரவல், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், விலைவாசி உயர்வு, மின்கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வு போன்ற காரணங்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மகளிர் உரிமைத் தொகை

அதிமுக அறிவித்த குலவிளக்கு திட்டத்தின் கீழ் ரூ.2,000 வழங்குவோம் என்ற வாக்குறுதியால் திமுகவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் ரூ.5,000 வழங்கி வாக்குகளை பெற முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரூ.2,000 வழங்குவோம் என கூறும் அரசு, தற்போது ஆட்சியில் இருக்கும் போதே அந்தத் தொகையை வழங்கியிருக்கலாம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.  அரசு ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், கல்விக்கடன் ரத்து, நீட் ரத்து, சிலிண்டர் மானியம் உள்ளிட்ட முந்தைய தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!