₹20 கோடி செலுத்தலைன்னா ஜெயலலிதாவின் சொத்துக்கள் ஏலம் விடப்படும் - ஐ.டி. எச்சரிக்கை!
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் சொத்துக்கள் மீதான வரி பாக்கி விவகாரம் தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி மற்றும் செல்வ வரி நிலுவைத் தொகை தொடர்பாக, வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிரடியான பதில்மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
வருமான வரித்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள கணக்கீட்டின்படி வரி பாக்கி விவரம் 2026 ஜனவரி 31 வரை வட்டியுடன் சேர்த்து ₹9,00,17,962. செல்வ வரி வட்டியுடன் சேர்த்து ₹11,08,08,730 என மொத்தத் தொகை சுமார் ₹20.08 கோடி செலுத்தப்பட வேண்டும். ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெ. தீபா மற்றும் ஜெ. தீபக் ஆகியோர் இந்த வழக்கில் தரப்பினராக உள்ளனர்.

தனது பங்கிற்கான வரியைத் தவணை முறையில் செலுத்த அனுமதி கோரியிருந்தார். இதுவரை சுமார் ₹1.12 கோடியை அவர் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி பாக்கித் தொகை ஒவ்வொரு முறை ஒவ்வொரு விதமாகத் தெரிவிக்கப்படுவதாகவும், சரியான தொகையைக் குறிப்பிட்டால் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் கூறி நீதிமன்றத்தை நாடியிருந்தார்.
வரி பாக்கியைச் செலுத்தத் தவறினால், ஏற்கெனவே முடக்கி வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விட நேரிடும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. போயஸ் தோட்ட இல்லம், ஹைதராபாத் திராட்சை தோட்டம் உள்ளிட்ட முக்கியச் சொத்துக்கள் ஏற்கெனவே வருமான வரித்துறையின் பிணையில் உள்ளன. நிலுவைத் தொகையை வசூலிக்க இந்தச் சொத்துக்களை ஏலம் விடத் தங்களுக்குச் சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளதாக ஐ.டி. துறை வாதிட்டுள்ளது.

முன்னதாக, வரி வசூல் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்த உயர்நீதிமன்றம், தற்போது ஐ.டி. துறையின் பதில்மனுவை ஏற்றுக்கொண்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் பிப்ரவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப் பிறகும், அவரது சொத்துக்கள் தொடர்பான சட்டப் போராட்டங்கள் இன்னும் முடிவுக்கு வராமல் இருப்பது அரசியல் மற்றும் பொது வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
