ஜேஇஇ 2026 விடைக்குறிப்பு வெளியீடு - உங்கள் மதிப்பெண் தெரிந்துக் கொள்வது எப்படி?

 
ஜேஇஇ

2026-27-ஆம் கல்வியாண்டிற்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வின் முதல் கட்டம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி 21 முதல் 29-ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற்றன. நாடு முழுவதும் சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதியுள்ளனர். மாணவர்கள் தங்களின் தற்காலிக விடைக்குறிப்புகளை (Provisional Answer Key)  jeemain.nta.nic.in அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். வெளியிடப்பட்டுள்ள விடைக்குறிப்பில் ஏதேனும் பிழைகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால், மாணவர்கள் அதனைத் தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது: நாளை பிப்ரவரி 6ம் தேதிக்குள் தங்களின் ஆட்சேபனைகளை உரிய ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். இணையதளம் வாயிலாக மட்டுமே ஆட்சேபனைகளைத் தெரிவிக்க முடியும்.

JEE NEET Entrance Exam

ஏதேனும் சந்தேகம் இருப்பின் மாணவர்கள் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்: தொலைபேசி எண்கள்: 011-40759000 / 69227700 மின்னஞ்சல்: jeemain@nta.ac.in கூடுதல் விவரங்களுக்கு: nta.ac.in

இந்தத் தற்காலிக விடைக்குறிப்புகளைச் சரிபார்ப்பதன் மூலம், மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களைத் தோராயமாகக் கணக்கிட முடியும். ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, இறுதி விடைக்குறிப்பு மற்றும் அதிகாரப்பூர்வத் தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!