இன்று வெளியாகிறது ஜேஇஇ விடைக்குறிப்புகள்... எப்படி டவுன்லோடு செய்வது? முழு விபரம்!
ஏராளமான மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஜேஇஇ மெயின் (JEE Main) 2026 முதல் அமர்வுக்கான (Session 1) விடைக்குறிப்புகள் இன்று வெளியாகிறது. தேசியத் தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் குறித்து இன்று ஒரு மிக முக்கியமான அறிவிப்பு வெளியாக உள்ளது.
இன்று (பிப்ரவரி 4) ஜேஇஇ மெயின் முதல் அமர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் (Provisional Answer Key) மற்றும் மாணவர்களின் விடைத்தாள்கள் (Response Sheets) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் இந்த விடைக்குறிப்புகளில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், பிப்ரவரி 4 முதல் பிப்ரவரி 5 வரை இணையதளம் வாயிலாகத் தங்களின் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம்.

ஜேஇஇ மெயின் முதல் அமர்வுக்கான இறுதி முடிவுகள் மற்றும் மதிப்பெண் அட்டைகள் (Scorecards) வரும் பிப்ரவரி 12, 2026 அன்று அல்லது அதற்கு முன்னதாக வெளியிடப்படும் எனத் தேசியத் தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
முடிவுகள் வெளியானவுடன், மாணவர்கள் பின்வரும் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களின் விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி முடிவுகளைச் சரிபார்க்கலாம். jeemain.nta.nic.in மற்றும் ntaresults.nic.in இணையதளங்களில் பார்க்கலாம்.

முதல் அமர்வுத் தேர்வில் பங்கேற்றவர்கள் அல்லது புதிதாகப் பங்கேற்க விரும்புபவர்கள் இரண்டாம் அமர்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்க ஏற்கனவே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 25, 2026 வரை நடைபெறும். இரண்டாம் அமர்வுத் தேர்வுகள் ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 9 வரை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே இன்று உங்களின் விடைத்தாள்கள் மற்றும் தற்காலிக விடைக்குறிப்புகளைப் பார்த்து, உங்களின் மதிப்பெண்களைத் தோராயமாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம். இறுதி முடிவுகளுக்கு இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
