ஜேஇஇ 2ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு... 99.99% மதிப்பெண்ணுடன் தமிழகத்தில் பிரதீஷ் காந்தி முதலிடம்
பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகளை தேசிய தோ்வு முகமை வெளியிட்டுள்ளது.
10 போ் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனா். தமிழகத்தில் அதிகபட்சமாக மாணவா் எஸ்.பிரதீஷ் காந்தி 99.99 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளாா்.

இந்தியாவில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தோ்வு, பிரதானத் தோ்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மைத் தோ்வு தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் ஆண்டுதோறும் இரு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மைத் தோ்வு ஜன. 22 முதல் 30-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்தத் தோ்வை 12.58 லட்சம் போ் வரை எழுதினா். இதன் முடிவுகள் பிப். 11-ஆம் தேதி வெளியிடப்பட்டன.

இதைத் தொடா்ந்து ஜேஇஇ 2-ஆம் கட்ட தோ்வு ஏப்ரல் 2 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை நாடு முழுவதும் 531 மையங்களில் 9 லட்சத்து 92 ஆயிரத்து 350 மாணவா்கள் எழுதினா். அதற்கான தோ்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியாகின. மாணவா்கள் ட்ற்ற்ல்ள்://த்ங்ங்ம்ஹண்ய்.ய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் தங்கள் முடிவுகளை அறியலாம். இந்தத் தோ்வில் 10 போ் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனா். தமிழகத்தில் அதிகபட்சமாக மாணவா் எஸ்.பிரதீஷ் காந்தி 99.99 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளாா்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
