ஜே.இ.இ. முதன்மை தேர்வு இன்று தொடக்கம்… 12 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!
இந்தியாவில் ஐ.ஐ.டி., என்.ஐ.டி. உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஜே.இ.இ. தேர்வு அவசியமாகும். இந்த தேர்வு முதன்மை மற்றும் பிரதானம் என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதன்மை தேர்வை தேசிய தேர்வுகள் முகமை ஆண்டுதோறும் இரண்டு கட்டங்களாக நடத்தி வருகிறது.

2026–27 கல்வியாண்டுக்கான முதல் கட்ட ஜே.இ.இ. முதன்மை தேர்வு இன்று தொடங்கி ஜனவரி 30 வரை நடைபெறுகிறது. 22, 23, 24 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் கடந்த 18ஆம் தேதி இரவு வெளியிடப்பட்டுள்ளது. jeemain.nta.nic.in தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுக்கு அட்மிட் கார்டு, பாஸ்போர்ட் புகைப்படம் மற்றும் அடையாள சான்று அவசியம். தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
